You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

ஐபிஎல் போன்று, ஆசிரியர் பணியிட மாறுதல் ஏலம் விடப்படுகிறதா? – கல்வித்துறைக்கு நீதிமன்றம் குட்டு

Tamil Nadu Children Education Policy 2021

ஐபிஎல் போன்று, ஆசிரியர் பணியிட மாறுதல் ஏலம் விடப்படுகிறதா? – கல்வித்துறைக்கு நீதிமன்றம் குட்டு

To get latest school education update to join in Telegram group

ஐபிஎல் ஏலம் போன்று ஆசிரியர் பணியிட மாறுதல் ஏலம் விடப்படுகிறதா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. ஆசிரியர் பணியிட மாறுதலுக்கு லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெறப்படுகிறதா என அரசு நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் மதுரை கிளை கூறியிருக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களில் போல ஆசிரியர் பணியிட மாற்றமும் லட்சக்கணக்கில் ஏலம் விடப்படுகிறதா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதோடு நீதித்துறை மற்றும் கல்வித் துறையில் நலன் கருதி ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கு லஞ்சம் பெறப்படுகிறதா என்பது குறித்த அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

ஆசிரியர் பணியிட மாறுதல்கள் மற்றும் அதற்கான கலந்தாய்வுகள் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, ஒரு வழக்கில் மனுதாரர் தரப்பில் லஞ்சம் கொடுப்பதன் அடிப்படையில் மட்டுமே அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்தாய்வு மூலமாக இடமாற்றம் செய்யப்படுகின்றன, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு இடம் மாறுதல் பெறுவதற்காக ஆசிரியர்கள் பத்து லட்ச ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டியுள்ளது. கலந்தாய்வில் வெளிப்படை தன்மை இல்லை என அவா் குறிப்பிட்டார்.

இதேபோன்று பல வழக்குகளிலும் ஆசிரியர் பணியிட மாற்றம் நேர்மையான முறையில் நடைபெறவில்லை என தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் போல, ஆசிரியர் பணியிட மாற்றமும் லட்சக்கணக்கில் ஏலம் விடப்படுகிறதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், லஞ்சம் கொடுத்த ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறும் நிலை சந்தேகத்திற்கிடமின்றி கவலைக்குரியது. இந்த நிலை தொடர்ந்தால் அது பெரும் விளைவுகளுக்கு வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டனர்.

இவ்வாறு லஞ்சம் கொடுத்து பணியிட மாறுதல் பெறும் ஆசிரியர்கன் மாணவர் என்ன விதமான ஒழுக்ககல்வியை கற்பிப்பார்கள் எனவும் கேள்விய எழுப்பிய நீதிபதிகள் இந்த வழக்கில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவி காவல் இயக்குனரை எதிர்மனுதாரராக நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்ப்பதாகவும்,  இதுகுறித்து பள்ளி கல்வித்துறை செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்புதுறை இயக்குனர் பதில் மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 4ம் தேதிக்கு ஓத்திவைக்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.