தொடக்க கல்வி முதலே மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தமிழ்ப் பற்றை ஊட்ட வேண்டும் என அகரமுதலித் திட்ட இயக்குனர் கோ.விசயராகவன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் மயிலாப்பூர் பேராசிரியர் சஞ்சீவி தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளி, நொச்சிக் குப்பம் மழலையர் தொடக்கப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நற்றமிழ் அறிேவாம் என்னும் தூயதமிழ் அகராதி வழங்கப்பட்டது.பள்ளி மாணவர்களுக்கு அகராதிகளை அகரமுதலி இயக்குனர் கோ.விசயராகவன் வழங்கி பேசியது,ஆங்கிேலயர் ஆட்சிக் காலத்தில்தான் நாம் அடிமைப்பட்டோம். நம் நாடு நமதென்று மறந்துபோனோம். காரணம் ஆங்கிலேயேர்கள் தங்களது மொழியை நம்மிடம் திணித்தார்கள். ஆங்கிலம் தெரிந்தால்தான் வேலை என்று சொன்னார்கள். வயிற்று பிழைப்புக்காக நம்முடைய தாய்மொழி தமிழை மறந்துபோனோம். ஆங்கிலம் கலந்துபேசினோம். அதனால்தான் தாய்த்தமிழின் தனித்தன்மையை இழந்து நிற்கிறோம். நம் அன்றாட பயன்படுத்தும் பொருட்கள், நம்முடைய சுற்றுச்சூழலில் உள்ள பெயர்களை, செயல்பாடுகளை தமிழில் அமைப்பதற்கான சொற்கள் அடங்கிய அகராதிதான் இந்த நற்றமிழ் அகராதி. இந்த நூலில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு அவர்களின் வகுப்பு நிலைக்கேற்ப, அன்றாடம் பயன்படுத்தும் பிறமொழி சொற்களுக்கு இணையான தூய தமிழ் சொற்கள் உள்ளன. எல்லாவற்றிற்கும் தமிழில் சொற்கள் உண்டு என்பதை உங்களுக்கு அறிமுகம் செய்யும் நற்றமிழ் அகராதியை நீங்கள் நன்கு படித்து, வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். பள்ளி பருவத்தில் இருந்தே பைந்தமிழ் மீதான பற்றை வளா்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் மொழிகலப்பில்லாமல் பேசவும், எழுத முடியும் என்றார், அவர்