Teacher Student Ratio in Tamil Nadu | மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரம் விவரம்
Teacher Student Ratio in Tamil Nadu
பள்ளி கல்வி இணை இயக்குனர் 2.11.2021ம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
Also Read: பள்ளி கல்வி ஆணையர் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் 2009ல் வகுக்கப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றி 2019-2020ம் ஆண்டில் (1.8.2019) பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப பணியாளர் நியமனம் (staff fixation) செய்யப்பட்ட போன்று 1.8.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கை ஏற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக அறிவுரைகள் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரம்
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு சில மாவட்டங்களில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலும் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலும் சில அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறான பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பிரிவுகளுக்கு தொடக்க கல்வி இயக்ககத்தில் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பின்பற்றப்படுவதை போல ஆர்டிஇ விதிகிளின் படி 60 மாணவர்கள் வரையில் 2 ஆசிரியர்களும், 61 முதல் 90 மாணவர்கள் வரை 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 மாணவர்கள் வரை 4 ஆசிாியர்களும் 121 முதல் 200 மாணவர்கள் வரை 5 ஆசிரியர்களும், இதேபோன்று ஒவ்வொரு 40 மாணவா்களுக்கு 1 ஆசிரியர் கூடுதலாக அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுநிலைப்பள்ளி மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரம்
6 முதல் 8ம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009 ஆர்டிஇ சட்டத்தின் படி அடிப்படையில் குறைந்தபட்சம் 3 பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருப்பின், நிா்வாக கணக்கிற்கொண்டு ஒர் ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யவும், ஒரு குறிப்பிட்ட வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கை 50க்கு மிகைப்படும்போது அவ்வகுப்பினை இரண்டு பிரிவுகளாக பிரித்து கூடுதல் பிரிவு ஏற்படுத்தலாம்.
உயர்நிலைப்பள்ளி மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரம்
6 -10 வகுப்பு வரையில் உள்ள பிரிவுகளுக்கு குறைந்தபட்ச மாணவா்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 5 ஆசிரியர் பணியிடங்கள் (தலா ஒரு பாடத்திற்கு ஒரு பணியிடம் வீதம்) அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் 9 மற்றும் 10ம் வகுப்பில் தலா 40 மாணவர்கள் இருப்பின் (1:40) வகுப்பிற்கு ஓர பிரிவாக கணக்கிற்கொள்ள வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட வகுப்பில் (9, 10 வகுப்பு) மாணவர்களின் எண்ணிக்கை 60க்கு மிகைப்படும்போது, அவ்வகுப்பினை இரண்டு பிாிவுகளாக பிரித்து கூடுதல் பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
கூடுதல் தேவை பணியிடங்கள்
மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் தேவை பணியிடங்கள் அனுமதிக்கும்போது பாடவாரியான சுழற்சியின் அடிப்படையிலும், அப்பள்ளிக்கு தேவையின் அடிப்படையிலும் (subject wise specific priority) அறிவியல், கணிதம், ஆங்கிலம், தமிழ், சமூக அறிவியல் என்ற முறையில் நிர்ணயம் செய்திட வேண்டும்.
அரசு பள்ளியில் பாடவேளை கணக்கிடுதல்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும்போது ஒரு ஆசிரியருக்கு வாரத்திற்கு குறைந்தபட்சம் 28 பாட வேளைகளை ஒதுக்கீடு உள்ளதா என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். (Period calculation based on the number of sections)
ஆங்கில வழிப்பிரிவில் பணியாளர் நிர்ணயம் விவரம்
அரசு பள்ளிகளில் தமிழ் வழி கல்விக்கு இணையாக ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதின்பேரி்ல், அரசு பள்ளிகளில் 2012-13ம் கல்வி ஆண்டிலிருந்து 6ம் வகுப்பிலும் அதன் பின்னர் தொடர்ந்து வரும் கல்வியாண்டுகளில் முறையே 7, 8, 9, 10ம் வகுப்புகளுக்கு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு ஆங்கில வழி கல்வியில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்கொண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும்போது தமிழ் வழி கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர் நிர்ணயம் செய்வது போன்றே, ஆங்கில வழி கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப தனிதனியே ஆசிரியர் நிர்ணயம் செய்திட வேண்டும்.
ஆங்கில வழிபிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் ஆங்கில வழி கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கை 15க்கும் குறைவாக இருப்பின் அவ்வகுப்பில் உள்ள குறைந்தபட்ச மாணவர்களை அருகாமையில் செயல்படும் ஆங்கில வழி பிரிவுகள் உள்ள பள்ளிகளில் சோ்த்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
உபரி ஆசிரியர்கள்
ஒரு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படும்போது குறிப்பிட்ட பாடத்தில் உபரி என கண்டறியப்பட்டால் பள்ளி வாரியாக குறிப்பிட்ட பாடத்தில் கடைசியாக அந்த பள்ளியில் பணியில் சேர்ந்த இளையவர் யார் என்பதை தலைமை ஆசிரியரிடம் பெற்று அவரை உபரி ஆசிரியர் பட்டியலில் பணி நிரவலுக்கு உட்படுத்த கணக்கிட வேண்டும்.
பணிநிரவல் சார்பான நடைமுறை என்றால் என்ன?
1.8.2021 அன்றுள்ள நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைத்து வகை அரசு, நகராட்சி உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் (பட்டதாரி, இடைநிலை) சார்பான பணியாளர் நடைமுறை பின்பற்ற வேண்டும்.