தமிழ்நாடு தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி கோவை மாவட்ட குழு வெளியிட்ட அறிக்கையில்,
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து, பழைய ஓய்வூதியம் பெற்றுதர வேண்டும். 2009க்குப்பின் புதிதாக பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு ஊதிய விகிதம் மிகவும் குறைவாக இருப்பதால், அந்த ஊதிய குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். கடந்த ஊதியக்குழு அமைக்கப்பட்ட புதிய ஊதிய குழுவின் அடிப்படையில் பெறப்பட்ட ஊதியங்கள் மூத்த ஆசிரியர்களுக்கும், இளைய ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய வேறுபாடுகள் மிக அதிகமாக தலைமை ஆசிரியர்களை விட உதவி ஆசிரியர்கள் அதிக ஊதியம் பெற்று வருவதால் அதை சரி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுகிறோம். கடந்த 2 ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் அனைத்தையும் ஆராய்ந்து களைந்திட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், மேற்படிப்புக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் வழக்கம்போல் விடுபட்டவர்கள் அனைவருக்கும் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் தொடர்ந்து கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தி மாணவர்கள் நலன் காக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் உயர்கல்வி படித்து பின்னேற்பிக்காக காத்து கொண்டிருக்கிறார்கள் அதை பெற்றுத்தர ஆவணம் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஆசிரியர்களின் மருத்துவ செலவிற்காக செலவிடப்படும் அனைத்து தொகையும் பெறும் வகையில் உரிய ஆணைகளை வெளியிட வேண்டும். மேலும் படிக்க