நான் ஏற்கனவே இந்த வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டது போல இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசு ஊழியர்களான ஆசிரியர் ஆகிய நாம் இந்த சமுதாயத்திற்கு தன்னார்வத்துடன் செயல்பட்டு இந்த அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் உதவி புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் கூறியிருந்தேன். அதேபோன்று தற்போது நமது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் அந்த அறிவிப்பையும் வெளியிட்டு தன்னார்வல மிக்க ஆசிரிய பெருமக்களின் பட்டியலை கேட்டுள்ளார். நமது இயக்கத்திலிருந்து பெரும்பாலான ஆசிரியர்கள் எந்தவித தயக்கமும் இன்றி பயமுமின்றி தங்களது பெயர்களை பதிவு செய்து இந்த செயல்பாட்டில் நாம் பங்கு பெறவேண்டும் என்று தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இதே நேரத்தில் தங்களுக்கு ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன் அரசாங்கத்தில் பணிபுரியக்கூடிய மருத்துவர்கள் ஆகட்டும் அரசு செவிலியர்கள் ஆகட்டும் துப்புரவு பணியாளர்கள், காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் நகராட்சி உள்ளாட்சி துறையில் உள்ள அனைவரும் இந்த நேரத்தில் மக்களுக்காக நேரம் காலம் பார்க்காமல் முழு நேரமும் பணிபுரிந்து வருகிறார்கள். காவல்துறை கூட இந்த நேரத்தில் வெயிலிலும் மழையிலும் நின்று நமக்காக பாதுகாப்பையும் அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். ஆகவே நாமும் அரசு ஊழியர்கள்தான். நாமும் இந்த சமூகப் பணியில் பங்கெடுத்து இந்த சமூகத்திற்கு கடமையாற்ற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டு நமது இயக்கத்தில் இருந்து அதிகப்படியான ஆசிரியர்கள் பெயர்களை பதிவு செய்து சமுதாயத்திற்காக பாடுபடுவோம் என்று கேட்டுக்கொள்கிறேன். வட்டாரச் செயலாளர்கள் இந்த நிகழ்வில் நமது ஆசிரியர்கள் அதிக அளவில் கலந்து கொள்ளக்கூடிய வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன். அதேநேரத்தில் உடல்நலம் சரியில்லாதவர்கள் மனபயம் உள்ளவர்கள், சுயநலவாதிகள் தவிர்த்துவிடலாம். நன்றி வணக்கம்.
இவண்,
சி.அரசு,
மாவட்டச் செயலாளர்,
கோவை.