Read Also: பள்ளிகளுக்கு டிசம்பர் 24ம் தேதி விடுமுறை
தலைமையாசிரியர் உத்தரவின்பேரில், ஆங்கில ஆசிரியர் பிரவீன்குமார், நவீன் வீட்டுக்கு சென்று விசாரித்தார். வறுமை காரணமாக நவீனை பள்ளிக்கு அனுப்ப, மாணவனின் பெற்றோர் மறுத்துவிட்டனர். இதனால் மாணவரின் வீட்டுக்கு நேரடியாக சென்று, வீட்டு முன் அமர்ந்து ஆசிரியர் பிரவீன் தர்ணா செய்தார். உங்களின் வறுமை நிரந்தரமாக நீங்கவே, நான் உங்களை வற்புறுத்துகிறேன் என கூறி கல்வியின் முக்கியத்துவத்தையும் புரிய வைத்தார். அதன்பிறகு, நவீனை பள்ளிக்கு அனுப்ப அவனது பெற்றோர் ஒப்புக்கொண்டனர். நவீனை பள்ளிக்கு அழைத்து வந்து பிரவீன்குமாரை, தலைமை ஆசிரியர் உட்பட பலரும் பாராட்டினார்.