பணப்பலன்கள் வழங்காததை கண்டித்து இடைநிலை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலகத்தில் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை வட்டார கல்வி அலுவலர் ஒய்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓராண்டாகியும் பணப்பலன்கள் வழங்குவதற்கான நடைமுறையில் காலதாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஏற்கனவே பணப்பலன்களை விரைந்து வழங்கக்கோரி, வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், பணப்பலன்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.இதற்கிடையில், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நேற்று வட்டார கல்வி அலுவலகத்தில் புகுந்து திடீர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார், மாவட்ட கல்வி அலுவலர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது, கடும் குளிரிலும் போராட்டம் விடிய, விடிய நீடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.