Teacher job latest news | ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
Teacher job latest news
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுாகவில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பெருந்தலைவர் காமராஜ் மேல்நிலை பள்ளியில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் நிரந்தர பணியிடத்திற்கு (OC) General Turn தகுதி பெற்ற நபர்கள் வரும் 17.11.2023ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை பள்ளி செயலருக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுகலை பாடப்பிரிவில் வேதியியல் மற்றும் கணிதம் பாடத்திற்கு எம்எஸ்சி, எம்.எட் கல்வித்தகுதி விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஊதியம் அரசு விதிகளின் படி வழங்கப்படும். வயது வரம்பு தகுதி டிஎன்ஆர்பி விதி பின்பற்றப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, செயலர், பெருந்தலைவர் காமராஜ் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம், இராஜபாளையம் (தாலுகா), விருதுநகர் மாவட்டம்.