Teacher Job Age Limit in Tamil | ஆசிரியர் பணி வயது வரம்பு
Teacher Job Age Limit in Tamil
தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பொதுப்பிரிவில் 42 வயது வரை உள்ளவர்கள்தான் நேரடி ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
தமிழகதத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சீனியார்ட்டி மற்றும் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 58 வயது நிரம்பாதவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஆனால், அவர்கள் கல்விப்பணியை முழுைமயாக செய்ய முடியாது என்பதாலும், கல்வித்துறையில் சீர்திருத்தங்களை ெகாண்டு வரும் வகையிலும், பொதுப்பிரிவில் ஆசிரியர் பணி நியமனத்துக்கு 40 வயதும், இதர பிரிவுகளில் 45 வயதும் என நிர்ணயிக்கப்பட்டது.
Read Also: டிஆர்பி ஆசிரியர் பணி வயது வரம்பு அரசாணை
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கொரோனா பிரச்னையால் ஆசிரியர் நியமனங்கள் நடக்கவில்லை. அந்த காலகட்டத்தில், ஆசிரியர் நியமனத்துக்கான வயதை கடந்தவர்களின் நலன் கருதி, கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் கல்வித்துறை புதிய உத்தரவு வெளியிட்டது. அதன்படி 2022ஆம் ஆண்டு டிசம்பர் வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் அமலாகும் வகையில் ஆசிரியர் நியமனத்துக்கு பொதுப்பிரிவினருக்கு 45ல் இருந்து 50 வயதாகவும் உயர்த்தி உத்தரவு பிறக்கப்பட்டது. நேற்று முன்தினத்தோடு இந்த உத்தரவுக்கான காலக்கெடு முடிந்துவிட்டது.
கடந்த 2021 செப்டம்பரில் வெளியிடப்பட்ட அரசு உத்தரவுப்படி 2022ஆம் ஆண்டு 1ம் தேதியில் இருந்து அசிரியர் நேரடி நியமனத்துக்கான வயது வரம்பு பொதுப்பிரிவுக்கு 42 ஆகவும்,இதர பிரிவினருக்க 47 ஆகவும் நிர்ணயம் ெசய்யப்டுகிறது.
எனவே, இனி தமிழகத்தில் பொதுப்பரிவில் 42 வயது முடியாதவர்களும், இதர பிரிவில் 47 வயது முடியாதவர்கள் மட்டுமே ஆசிரியர் பணி நேரடி நியமனத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
இந்த வயதை கடந்தவர்கள் ஆசிரியர் பணிக்கான படிப்ப முடித்திருந்தாலும், அது பயன் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.