Teacher Higher Studies Latest News | உயர் கல்வி முன் அனுமதி விவரம் சேகரிப்பு
Teacher Higher Studies Latest News
தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, தொடக்க கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டுன் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, நடுநிலை பள்ளி, நகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் 10.3.2020க்கு முன்னர் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் பாடங்களில் முன் அனுமதி பெற்று உயர்கல்வி பயின்ற மற்றும் துறையின் முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
Read Also: உயர்கல்வி படிக்க முன் அனுமதி பெறுவது எப்படி
மேற்குறிப்பிட்ட பாடங்களை தவிர்த்து பிற பாடங்களின் துறையின் முன் அனுமதி பெற்று உயர்கல்வி பயின்ற மற்றும் துறையின் முன் அனுமதி பெறமாமல் உயர்கல்வி பயின்ற விவரங்ளை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இந்த விவரங்கள் எவ்வித பிழையின்றி, வரும் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.