ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு - ஆணையர் உத்தரவு |Teacher General Transfer Counselling 2022 Postponed
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பதாக பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் கடிதத்தில் கூறியிருப்பதாவது, 2021-22ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறை ஆணைகள் வெளியிடப்பட்டது.
ALSO READ THIS: ஆசிரியர் கலந்தாய்வு: ஆசிரியர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
மேலும், ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகளுக்கான திருத்திய கால அட்டவணை வெளியிடப்பட்டது.
தற்போது நிர்வாக காரணங்களுக்காக பள்ளி கல்வி ஆணையராக கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அரசு, நகராட்சி, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு 15.02.2022 முதல் நடக்கவிருந்த மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இதுகுறித்து பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும்.
தொடக்க கல்வி இயக்குனரின் கட்டுப்பாட்டில் உள்ள துவக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களை பொறுத்த வரையில் முந்தைய கலந்தாய்வுகளில் பணியிடத்துடன் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை தாய் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு மீள ஈர்த்தல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை கையாள அதே ஒன்றியம், வேறு ஒன்றியத்தில் இருந்து பணியிடத்துடன் பணி நிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை தாய் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஈர்த்தல் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள், கல்வி மாவட்டத்திற்குள், வருவாய் மாவட்டத்திற்குள், இடைநிலை ஆசிரியர்கள் பொறுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு தேதி 15.02.2022 அன்று வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.