Teacher Eligibility Test Marks |டெட் தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படுமா?
Teacher Eligibility Test Marks
பல டெட் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,
நடந்து முடிந்த டெட் தேர்வுகள் பொதுவாகவே மிகவும் கடினத் தன்மையுடன் வினா அமைப்பு பெற்றிருந்தது. எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் படித்து தேர்வு எழுதி இருந்தாலும், கேட்கப்பட்ட வினாக்கள் எச்ஓடி எனப்படும் உயர் சிந்தனை வினா அளவிலேயே இருந்தது. மேலும் கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் டெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற 82 என்ற மதிப்பெண்களை அதாவது 55 சதவீதம் இருக்க வேண்டும் என அறிவித்திருந்தனர். அப்போது அது டெட் தேர்வு மட்டுமே பணி நியமனத்திற்காக இருந்தது.
Read Also: டிஆர்பி முகவரி
ஆனால் தற்போது, பணி நியமனம் பெற இரண்டாவதாக மேலும் ஒரு நியமனத் தேர்வு எழுதிய ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதால் டெட் தேர்வுகளில் தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் ஆக இருந்தால் அதாவது 75 மதிப்பெண்கள் சற்றே நிம்மதியுடன், நம்பிக்கையுடன் அடுத்த தேர்வு எழுத தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தயாராக வாய்ப்பு உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது போட்டி தேர்வு அல்ல அது ஒரு தகுதி தேர்வு மட்டுமே. அதாவது 75 மதிப்பெண்க் பெற்றாலே தேர்ச்சி என்ற அறிவிப்பை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.