ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரியக்கத்தின் பொதுச்செயலாளரும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப் பொதுச்செயலாளருமான ந.ரெங்கராஜன் அவர்கள் இயக்கத்தின் சார்பில் திரட்டப்பட்ட கொரோனா முதல்வர் நிவாரண நிதியை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஏ.செங்கோட்டையன் அவர்களிடம் மே 21ம் தேதி ரூ 1,06,51,977.(ரூபாய் ஒரு கோடியே ஆறு லட்சத்து ஐம்பத்து ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து ஏழு ) தொகைக்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்வில்ஈரோடு மாவட்ட ஆட்சியர், S.P, ஈரோடு கிழக்கு,மேற்கு, மொடக்குறிச்சி, திருப்பூர் தொகுதி M.L.A க்கள் ,முன்னாள் கல்வியமைச்சர் உயர்திரு. என்.ஆர். சிவபதி பேரியக்கத்தின் மாநில தலைவர் திரு. சுதாகரன், மாநில பொருளாளர் திரு.கதிரவன் ஓய்வு பிரிவு மாநில தலைவர் திரு. ஐயப்பன், பொதுச்செயலாளர் திரு.ஆறுமுகம் மாநில பொருளாளர் திரு.ஜெகநாதன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஈரோடு திரு.முத்து ராமசாமி, திருச்சி திரு. நீலகண்டன், கோவை திரு.அரசு, திரு.விநாயகன், திரு ராஜபாண்டியன்,திரு சாமிநாதன் திண்டுக்கல் திரு.துரைராஜ், கரூர் திரு.மணிகண்டன், திருப்பூர் திரு.ஜெயராஜ், உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்களும் மேலும் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.