தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு என்றால் என்ன?
பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்துக்கொள்ளும் வகையில் திறனறி தேர்வு நடத்தப்படுகிறது.
Read Also: Tamil Talent Search Examination Application PDF Downloadதமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு உதவித்தொகை
இந்த தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் 1,500 மாணவர்களுக்கு ரூ.1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அதாவது 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு. இதில் 50 விழுக்காடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.2.70 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
Also Read: தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு | மாதம் ரூ 1500 பெறலாம்திறனறித் தேர்வு எந்த வகுப்பு மாணவர்கள் எழுத முடியும்
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு எப்போது நடக்கும்?
இத்தேர்வு ஒவ்வொரு வருடம் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும். அரசு தேர்வுகள் இயக்ககம் இத்தேர்வை நடத்தும்.
தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு பாடத்திட்டம்
தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்விற்கு, தற்போது தமிழ்நாடு அரசின் 10ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் உள்ள பாடதிட்டங்கள் போதுமானது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக தமிழ் பாட புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு எங்கு நடக்கும்
மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுத அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
தனியார் பள்ளி மாணவர்கள் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு எழுத முடியுமா?
மொத்தம் 1500 பேரில், திறனறித் தேர்வில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் மற்றும் மீதமுள்ள 50 சதவீதத்திற்கு அரசு பள்ளி மாணவர்கள் உள்பட பிற தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளி மாணவர்கள் (CBSE/ICSE) தேர்வு எழுத முடியும்.
Tamil Talent Search Exam in Tamil தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
மாணவர்கள் தனியாக ஏதும் விண்ணப்பிக்க முடியாது. மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு கட்டணம்?
திறனறி தேர்வுக்கு விண்ணப்பமாக ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
பிற விவரங்கள்
மாநிலம் முழுவதும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர், பயிலும், வகுப்பு, பள்ளி முகவரி, இல்ல முகவரி, செல்பேசி எண், வங்கி கணக்கு விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் மாவட்ட வாரியான பட்டியலை அந்தந்த மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பள்ளி கல்வி ஆணையர் அளவில் பராமரிக்கப்படும். ரூ.1500 வீதம் ஊக்கத்தொகை பெறும் மாணவர்களின் வங்கி கணக்கில் உரிய வழிமுறைகளின்படி வரவு வைக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி ஆணையர் வாயிலாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து அனைவரும் அறியும் வகையில் பள்ளி அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.