Tamil Nadu Teachers Need | தமிழகத்தில் 5 லட்சம் ஆசிரியர்கள் தேவை
Tamil Nadu Teachers Need
தமிழகத்தில் ஐந்து லட்சம் தமிழ் ஆசிரியர்கள் தேவை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ள எழுத்துபூர்வ பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா எம்பி சந்திரசேகர் தாகூர் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் மாநிலங்களில் மொழிபாடத்தில் தேவையான பணியிட விபரங்களை கேட்டார். இதற்கு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர்
அன்னபூர்ணா தேவி மத்திய அரசின் மும்மொழி கொள்கையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என அறிவுறுத்தினா். நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் அந்தந்த மாநில மொழிப்பாட ஆசிரியர்கள் தேவை அதிக அளவில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் மட்டும் 5,69,920 தமிழ் ஆசிரியர்கள் தேவை என எழுத்து பூர்வ பதிலில் கூறி உள்ளார்.
Read Also: ஆசிரியர் தகுதி தேர்வு தோ்ச்சிக்கு உண்மைதன்மை அவசியம்
அண்டை மாநிலமான புதுச்சேரியில் 5,976 பேரும், கேரளாவில் 1271 பேரும், ஆந்திராவில் 1,268 பேரும், தெலுங்கானாவில் 511 பேரும், கர்நாடகாவில் 442 தமிழாசிரியர்கள் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பிற மாநில மொழிப்பாட ஆசிரியர்களுக்கும் அதிக தேவை இருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
News Source Thanthi TV and Credit Goes to Thanthi TV.