Tamil Nadu Teachers Appointment Age | ஆசிரியர் பணி வயது வரம்பு வெளியீடு
Tamil Nadu Teachers Appointment Age
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவின்பேரில், பள்ளி கல்வித்துறை ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை அரசாணை 185 மூலம் இன்று வெளியிட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் பல்வேறு ஆசிரியர் சங்க அமைப்பினா் போராட்டம் நடத்தினர்.
அதன்படி டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பணி நாடுநர்களுக்கு உச்ச வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 53ஆம், இதர பிரிவினருக்கு 58ம் ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி பள்ளி கல்வி செயலாளர் குமரகுருபரன் அரசாணை 185 வெளியிட்டுள்ளது.
முன்னதாக, பொதுப்பிரிவினருக்கு 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 50 ஆகவும் வயது வரம்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.