Tamil Nadu teacher protest last news | தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்
Tamil Nadu teacher protest last news
முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடும் வரை, ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்களும், 12 ஆண்டுகளுக்கு மேலாக பகுதிநேர சிறப்பு நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போட்டி தேர்வு இல்லாமல் தங்களை ஆசிரியர் பணியிடங்களில் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் சுமார் 180 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் போராட்ட குழு ஆசிரியர்கள் தலைமை செயலகத்தில் உள்ள பள்ளி கல்வி செயலர் காகர்லா உஷா, இயக்குனர் அறிவொளி சந்தித்தனர். அப்போது பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆசிரியர்களை சந்திக்காதது அவர்கள் மத்தியில் கடும் அதிருப்பதி எழுந்துள்ளது.
இதன் காரணத்தை, அதிகாரிகள் கூறும்போது, ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்துவதால் பொது மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது, மேலும் காலாண்டு விடுமுைற விடுமுறை முடிவின்போது, அவர்களாகவே கலைந்து சென்றுவிடுவார்கள், இதனால்தான், அமைச்சர் போராட்ட ஆசிரியர்களை சந்திக்க மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.