ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கல்வித்துறை சார்பில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, செப்டம்பர் 5ம் தேதி மாநில நல்லாசிரியர் வழங்கப்பட்டு அவர்கள் கவுரவிக்கப்படுவார்கள். இந்த 2020- 2021ம் கல்வி ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருது பெயர் பட்டியலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தற்போது விருதுநகர் மாவட்ட ஆசிரியர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் விவரம் பின்வருமாறு –
நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ப கருணைதாஸ், ம.ரெட்டியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சு.ஜெயராஜ், ந.அ..அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம், தலைமை ஆசிரியர் பூ.அ.ரமேஷ், ஷித்திரிய வித்யாசாலா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செ.சந்திரமோகன் ஆகியோருக்கு மாநில நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.
மல்லாங்கிணறு, அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) அ.இளங்கோ, டாக்டா இராதாகிருஷ்ணன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர், முதல்வர் சே.ஆரோக்கியராஜா, ஆ.மு அருணாசலநாடார் ஆரம்ப பள்ளி, ஜீவா நகர், தலைமை ஆசிரியர் ரி.ஜான்சி, புஷ்பலதா, மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் ஜாக்குசலின் ஜூலியட், வில்லிபத்திரி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை (ஆங்கிலம்) சந்திராமேரி ஆகியோர் விருது பெற்றுள்ளனர்.
சாலைமறைக்குளம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் மு.மாலதி, கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆசிாியர் (கணிதம்) ப.கார்த்திகேயன் ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பிற மாவட்டங்கள் ஆசிரியர் பட்டியல் வரிசையாக வெளியிடப்படும்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |
Pls give us the list of cuddalore district also…as soon as possible.
Sure mam/sir
Dharmapuri district also sir !!