பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ச கண்ணப்பன் நாளை பள்ளிகள் விடுமுறை என அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2024-2025 கல்வியாண்டிற்கான நாட்காட்டியில் திருத்தம் வெளியிடப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. நாளை 14.9.2024 சனிக்கிழமை அன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி தங்கள் ஆளுகைக்கு கீழ் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், இவ்விவரத்தை தெரியப்படுத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.