1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதன்கிழமை ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8 வரை பொதுத்தேர்வு முடிவடைந்தது. தொடர்ந்து 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் 2ம் தேதி முதல் தொடங்கியது. இந்த தேர்வுகள் ஏப்ரல் 12ல் முடிக்கப்பட்டு ஏப்ரல் 13ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. இதற்கிடையே 4-9 வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10, 12 ஆகிய நாள்களில் நடைபெறவிருந்த தேர்வுகள் ரமலான் பண்டிகை காரணமாக, முறையே ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் இறுதி தேர்வுகள் செவ்வாய்கிழமை (இன்றுடன்) நிறைவடைகின்றன. இதை தொடர்ந்து மாணவர்களுக்கு ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் வெளியிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாலும், ஜூன் 4ம் தேதி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதாலும், அதன்பிறகே பள்ளிகள் திறப்பு இருக்கும் என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.