கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக, கட்டுப்பாடுகள் தொடர்ந்து உள்ளது. சமீபத்தில் வெளியான தமிழக அரசு செய்தி குறிப்பில் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிப்படும் வழங்கப்படும், மீதம் உள்ள 11 மாவட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பு வெளியிடவில்லை. அதே சமயத்தில் முன்னதாக, 30 சதவீத ஊழியர்கள் அலுவலகங்களில் பணியாற்ற வேண்டும் என தமிழக அரசு கூறியிருந்தது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கட்டுப்பாட்டுகள் உள்ளதாகவும், தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம் என வாட்ஸப் குழுக்களில் விவாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு சில சங்க நிர்வாகிகள் நேரடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமாகிருஷ்ணன் அவர்களுக்கு தொடர்பு கொண்டு திங்களன்று பள்ளி திறப்பு உள்ளதா என கேட்டுள்ளனர். இதனையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். இது கோவை கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.