You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் யார் | கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்

Tamil Nadu School Education Minister Rajmohan

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்: 

சென்னையை சேர்ந்தவர் ராஜ்மோகன், இவர் வயது 40. சென்னை பல்லாவரத்தில் உள்ள செயின்ட்மேரிஸ் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த இவர், பட்டய படிப்பில் வணிக மேலாண்மை முடித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டப்படிப்பை முடித்த இவர், சிறந்த ஆளுமையாகவும், தமிழ் பேச்சாளராகவும், நிலைநிறுத்திக்கொண்டார்.

மேலும் திரை பயணத்தில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். மேலும் ராஜ்மோகன் ரிப்போர்ட் என்ற வலைெயாளி ஆரம்பித்து, அன்றாடம் நிகழும் நிகழ்வுகள், சமூக வரலாறு குறித்து காணொளியாக வெளியிட்டு வந்தார். பல லட்சம் பேர் இவரை அத்தளத்தில் பின்தொடர்ந்தனர். தனது திறமை மூலம் சின்னத்திரை நோக்கி நகர்ந்தார். குறிப்பாக, தொலைக்காட்சி நிறுவனம் தொகுப்பாளராக, ஊக்குவிப்பு பேச்சாளராக வலம் வந்தார். தற்போது அரசியலில் நுழைந்து, அரசியல்வாதியாக மாறி, தற்போது கல்வித்துறையின் அமைச்சராக உள்ளார். 

அரசியல் கட்சியில் ராஜ்மோகன்:

புகழ்பெற்ற நடிகர் ஜோசப் விஜய் அவர்களல் துவங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் தன்னை இணைத்துகொண்டார். கொள்கை பரப்பு செயலாளராக பதவி பெற்ற இவர், அக்கட்சியின் கொள்கைகளை சமூக வலைதளம், ஊடக விவாதம் மற்றும் அரசியல் கூட்டங்களில் எடுத்துரைத்தார். கட்சி கொள்கைகளை தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு சென்றதிலும் பெரிய பங்காற்றினர். அதுமட்டுமின்றி, விஜய், அவர் கட்சி கூட்டத்தில் பேசும்போது, அவரை அறிமுகப்படுத்தி வைக்கும் முதல் குரல் ராஜ்மோகனுடையதாகத்தான் இருக்கும். பின்னர், அக்கட்சியில் முக்கிய புள்ளியாக வலம் வந்தார். 

கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகன்:

தேர்தல் அறிவிப்பு பின்னர், இவர் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை எழும்பூர் சட்ட மன்ற தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளாராக களம் காணப்பட்டார். ராஜ்மோகன் 53,901 வாக்குகளை பெற்று, திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளர் தமிழன் பிரசன்னாவை 10,408 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றார். இதன்மூலம் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.  

தமிழக வெற்றிக் கழகம், விடுதலை சிறுத்தைகள், இடது சாரி கட்சி ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. விஜய் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அமைச்சரவை பட்டியலில் ராஜ்மோகன் இடம்பிடித்தார். சில நாட்களில் வெங்கட்ராமன் கல்வித்துறை அமைச்சா் ஆவார் என செய்திகள் வலம் வந்தது.  இதற்கிடையில் தமிழகத்தின் உயர்ந்த நிதிநிலை கொண்ட துறையான கல்வித்துறையை ராஜ்மோகனுக்கு வழங்கப்பட்டது.

கல்வித்துறையில் என்ன சவால்

பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஸ் பொய்யாமொழி இருந்தபோது, பல பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. குறிப்பாக, ஆசிரியர்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். கல்வித்துறையில் தீர்க்கப்படாத பல பிரச்னை உள்ளது. குறிப்பாக, பள்ளிகளில் ஆசிாியர் காலிபணியிடம், தமிழ்வழி கல்வி நடைமுறைப்படுத்துதல், பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் நிரந்தர வேலை, குறைந்தபட்ச ஊதியம், தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளை உள்ளிட்ட பிரச்னைகளை அவர் நிவர்த்தி செய்வாரா என எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் மேலோங்கி உள்ளது. 

ராஜ்மோகன் நிர்வகிக்கும் துறைகள்

பள்ளிகல்வி, தொல்லியல்துறை, தமிழ் ஆட்சிமொழி, தமிழ் கலாசாரம், விளம்பரம், செய்திதாள் கட்டுப்பாடு.