தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை ஜனவரி 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. மாணவர்களின் படிப்பு சுமையை குறைக்கும் வகையில், ஒரு வாரத்திற்கு முன்பு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டது.
பொதுத்தேர்வுக்கு குறைக்கப்பட்ட பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்பதால், பள்ளி ஆசிரியர்கள் அந்த பாடத்திட்டத்தில் இருந்த மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.