வட்டார கல்வி அலுவலர் பணி நியமனம் தொடர்பான வழக்கில், ஒரே பதவிக்கு ஓரே விதமான ஆணை வழங்கக்கோரிய வழக்கில், பள்ளி கல்வித்துறை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூரை சேர்ந்த செந்தில்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கொடைக்கானல் கே.சி பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய எனக்கு வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. பதவி உயர்வில் 70 சதவீதம் பேருக்கு தனி ஆணையும், நேரடி நியமனத்தில் 30 சதவீதம் பேருக்கு தனி ஆணையும் வழங்கப்படும். இதில் பதவி உயர்வில் வருவோருக்கு சற்று சம்பளம் குறைவாக நிர்ணயிக்கப்படுகிறது. ஒரே பதவிக்கு இருவித ஆணை வழங்காமல், ஒரே விதமான ஆணையாக வழங்க உத்தரவிட வேண்டும், என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எம்.எம் சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் இதுதொடா்பாக, பள்ளி கல்வித்துறை செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 26ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.