You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

பிளஸ் 2 செய்முறை தேர்வு ஏப்ரல் 16ம் தேதி துவக்கம்

|

அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

பள்ளித் தலைமையாசிரியர்கள் 08.04.2021 முதல் 23.04.2021 வரையிலான நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password -ஐ பயன்படுத்தி, மேல்நிலை இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை அனைத்து தேர்வர்களுக்கும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்கு, பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் 16.04.2021 முதல் 23.04.2021 வரையிலான நாட்களில் கண்டிப்பாக நடத்த வேண்டும்.

செய்முறைத் தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் /தலைமையாசிரியர்கள், செய்முறை புறத்தேர்வில் பங்கேற்காத பள்ளி மாணவர்களின் பதிவெண் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

உயிரியல் பாட செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல்களில், இரண்டு கலங்களாக பிரித்து, உயிரி - தாவரவியல் மற்றும் உயிரி-விலங்கியல் பாடங்களின் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும்.

இயற்பியல் பாட செய்முறைத் தேர்விற்கு “Scientific Calculator Digital Diary”–யினை மட்டும் எடுத்து வர தேர்வர்களுக்கு அனுமதி வழங்கலாம்.

செய்முறைத் தேர்வில் மாணாக்கருக்கு வழங்கும் மதிப்பெண்களை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலில் பதிவு செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்களை பாடவாரியாக தனித்தனி

உறையில் அரக்கு முத்திரையிட்டு தங்களது சொந்த பொறுப்பில் வைக்க வேண்டும். சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 24.04.2021-க்குள் தவறாது ஒப்படைக்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள் அனைவரது செய்முறைத் தேர்வு மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை முதன்மைக் கல்வி அலுவலர் உறுதி செய்ய வேண்டும் மற்றும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் கட்டுகளை (உரிய இணைப்புகளுடன்) பள்ளி எண் வாரியாக கட்டுகளாகக் கட்டி 06.05.2021 அன்று மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்  அறிக்கையில் கூறியுள்ளார்.