சமீபகாலமாக, தமிழக பள்ளிக் கல்வித்துறையில் நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் உரிய காலத்திற்குள் பதில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. இதனால் அவ்வப்போது நீதிமன்ற நடவடிக்கைகளில் அதிகாரிகள் வசமாக சிக்குகின்றனர். இதனால், கல்வித்துறை உயர் அதிகாரிகளும் பல சட்ட ரீதியான பிரச்னையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனை சமாளிக்க, தற்போது பள்ளி கல்வி இயக்குனர் மாவட்ட அளவில் சட்ட பயின்ற ஒரு பணியாளரை தற்காலிக ஏற்பாடாக நியமித்து கொள்ளலாம் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளளார். இது அதிகாரிகளுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.