கல்வித்துறை பட்ஜெட் 2022-23 முழு விவரம் - இல்லம் தேடி திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும்
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
கல்வித்துறை பட்ஜெட் 2022-23 - இல்லம் தேடி கல்வி திட்டம்
அவர் கல்வித்துறை அறிவிப்பில் பேசியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததன் காரணமாக மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்யும் வகையில் இல்லம் தேடி கல்வி என்ற சிறப்பான முன்னோடி கல்வித் திட்டம் 38 மாவட்டங்களில் 1.88 லட்சம் தன்னார்வலர்களை கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இது நமது நாட்டிற்கே ஒரு முன்னோடி திட்டமாக திகழ்கிறது. இதன் வாயிலாக 30 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்றால், பெருமளவில் கல்வி கற்றலில் இழப்பு ஏற்பட்டுள்ளதால் இத்திட்டம் வரும் நிதி ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கல்வித்துறை பட்ஜெட் 2022-23 - மாடல் பள்ளி
அரசு பள்ளி மாணவர்கள் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஸ்டீரிம் அதாவது அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேர்ந்து கல்வி பெற உதவும் நோக்கோடு கல்வியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் முன் மாதிரி பள்ளிகளை இந்த அரசு தொடங்கியுள்ளது. வரும் நிதியாண்டில் மேலும் 15 மாவட்டங்களில் இத்தகைய முன் மாதிரி பள்ளிகள் மாடல் ஸ்கூல் தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கல்வித்துறை பட்ஜெட் 2022-23 - பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்
அடுத்து ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசு பள்ளிகளை ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் உட்பட நவீனமயமாக்கம் அதற்காக பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் என்று மாபெரும் திட்டத்தை அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில் அரசு பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். மேலும் மாணவர்களின் எண்ணிக்கையை எண்ணிக்கைக்கு ஏற்ப தொடக்கப்பள்ளிகள் திறன்மிகு வகுப்பறைகளும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், இதர பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்கள் உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இத்திட்டங்கள் படிப்படியாக 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். வரும் நிதியாண்டில் 1300 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கல்வித்துறை பட்ஜெட் 2022-23 - மத்திய நூலகங்கள்
மாநிலத்தில் இயங்கி வரும் பொது நூலகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து மேம்படுத்த தேவையான ஆலோசனைகள் வழங்க ஒரு உயர்மட்ட குழுவை அரசு அமைத்துள்ளது புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உயர்தர வசதிகளுடன் கூடிய மாவட்ட மத்திய நூலகங்கள் அரசால் ஏற்படுத்தப்படும். நூலகங்கள் நூலக கட்டடங்களுக்கு தமிழறிஞர் பெயர் சூட்டப்படும். சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவது புத்தக வாசிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. புத்தக வாசிப்பு ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை மாநகராட்சி போன்ற தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படும். இத்துடன் இலக்கியச் செழுமை மிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழா நடத்தப்படும். புத்தகக் காட்சியை புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கிய திருவிழாக்கள் வரும் ஆண்டில் 5.6 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.
கல்வித்துறை பட்ஜெட் 2022-23 நிதி எவ்வளவு
மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித்துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.