You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

பேருந்துகளில் திக், திக் பயணம், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யுமா தமிழக அரசு?

||

பெற்றோர் கருத்து கேட்பு கூட்டத்திற்கு பின், பள்ளிகள் திறக்கப்பட்டதாகவும், அவர்கள் பள்ளிகள் திறக்க இசைவு தெரிவித்ததாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

பள்ளிகள் திறப்பு முன்னிட்டு, பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு, பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் பள்ளிகளில் கொரோனா பரவல் தடுக்க முடியும் என்றும் கூறப்பட்டது.

இருந்தாலும் தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டது, நாளிதழ்களில் செய்தியாக வெளி வந்தது.

பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வலுவாக இருந்தாலும், மாணவர்கள் பயணிக்கின்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கொரோனா தடுப்பு என்பது காற்றில் பறக்கிறது.

கொரோனா தளர்வுக்கு பின், போக்குவரத்து துறை சார்பில் பேருந்துகள் இயக்கியதும், கொரோனா அச்சம், சமூக விலகல் உள்ளிட்ட காரணமாக மக்கள் பேருந்து பயன்பாட்டு பெருமளவில் தவிர்த்தனர். நிலைமை சகஜ நிலைக்கு திரும்பியதும், சற்றே கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பள்ளி, கல்லூரி திறப்புக்கு பிறகே, இன்னும் அதே அளவிலான பேருந்துகள் இயக்கப்படுவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சில இடங்களில் மாணவர்கள் பேருந்து பின்புறத்தில் உள்ள ஏணி படிகளை பிடித்தவாறும் பயணம் செய்கிறார்கள். இது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும். அதேபோன்று, மாணவர்கள் கூட்டம், கூட்டமாக பேருந்துகளில் பயணம் செய்வது கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பில்லையா? என்று கேள்வி அனைவரும் மத்தியில் எழுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொங்கியபடி பேருந்தில் பயணம் செய்யும் படங்களில் சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவி வருகிறது.

பள்ளி மாணவர்கள் கூறும்போது, கொரோனா முன்பே பேருந்தில் மாணவர்கள் கூட்டத்துடன் பயணித்தோம். ஆனால், பெரும்பாலான இடங்களில் பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், தற்போது பேருந்தில் தொங்கியபடியும், ஏணி மற்றும் ஜன்னல் கம்பிகளை பிடித்தவாறு பேருந்தில் பயணித்து பள்ளிக்கு செல்ல வேண்டியதாக உள்ளது. கொரோனா அச்சம்விட, பேருந்தில் இருந்து கீழே விழுந்துவிடுவோமா என்ற பயம் அதிகம் உள்ளது. குறிப்பாக, ஒரு சில மாணவிகள் கூட்டத்தை பார்த்து பயந்து, பள்ளிக்கு போக முடியாமல் வீடு திரும்புகின்றனர்.

முக்கிய காரணம், பேருந்து பற்றாக்குறையே காரணம். இந்த பிரச்னையை தீர்க்க, காலை மற்றும் மாலைந நேங்களில் பள்ளி மாணவர்களுக்கு என சிறப்பு பேருந்துகள் மட்டும் இயக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் நிம்மதியாக பள்ளிக்கு சென்று, வர முடியும் என அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய தீர்வு காண வேண்டும் எனவும், பேருந்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.