Tamil Nadu Rain Holiday Today | மழை காரணமாக இன்று பள்ளிகள் விடுமுறை
Tamil Nadu Rain Holiday Today
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 13 மாவட்டங்களில் அதாவது, சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இரவு முதல் தொடர் மழை காரணமாக, கோவை, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. அடுத்தடுத்து சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.