அரசு தோ்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மார்ச் 2024 நடைபெற்ற பிளஸ்2 பொதுத்தேர்வில், தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்களிடம் ஜூன், ஜூலை மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துணைத்தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது
மார்ச் 2024 முதலாம் ஆண்டு (பிளஸ் 1 அரியர்), பிளஸ் 2 பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 16.5.2024 (வியாழக்கிழமை) முதல் 1.6.2024 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் (ஞாயிற்றுகிழமை நீங்கலாக) காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்களும் மற்றும் மார்ச் 2024 பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும் 16.5.2024 முதல் 1.6.2024 வரையிலான நாட்களில் (ஞாயிறு நீங்கலாக) காலை 11 மணி மதல் மாலை 5 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு தேர்வுகள் சேவை மையங்கள்
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை
www.dge.tn.gov.ion என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறியலாம் அல்லது அந்தந்த முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் அறியலாம்.
பிளஸ் 2 துணைத்தேர்வு கட்டணம்
ஏற்கனவே பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதி தோல்வியுற்ற பாடங்களில் தேர்வு எழுதும் தேர்வர்கள் மற்றும் பிளஸ் 1 தேர்வு எழுதி தோல்வியுற்ற பாடங்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் -
ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ 50 வீதம் தேர்வு கட்டணமும், அதனுடன் இதர கட்டணமாக ரூ 35 செலுத்த வேண்டும் மற்றும் ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ 70. பிளஸ் 2 தேர்வினை முதன் முறையாக எழுதவுள்ள தேர்வர்கள் - தேர்வு கட்டணம் ரூ 150, இதர கட்டணம் ரூ 35 என மொத்தம் ரூ 185 செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணத்தினை சேவை மையத்தில் பள்ளியில் பணமாக செலுத்த வேண்டும். சிறப்பு அனுமதி திட்டம்
16.5.2024 முதல் 1.6.2024 வரை நாட்களில் ஜூன்/ஜூலை 2024 பிளஸ் 2 துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் உரிய கட்டணத் தொகையுடன் ஜூன் 3 மற்றும் ஜூன் 4 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1000
(2023, 2024ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகில் பயின்றி தேர்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவர்களுக்கு இந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது).
பிளஸ் 2 துணைத்தேர்வு ஹால்டிக்கெட்
ஆன்லைன் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு தேர்வர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண் பயன்படுத்தியே அரசு தோ்வுத்துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவு சீட்டு (ஹால்டிக்கெட்) பதிவிறக்க செய்ய இயலும் என்பதால், ஒப்புகை சீட்டினை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
To Download Exam Time Table - Click Here