அரசு தேர்வுகள் இயக்குனர் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர்கள் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, மார்ச மற்றும் ஏப்ரல் 2024-2025 மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ்1) மற்றும் இரண்டாம் ஆண்டு (பிளஸ்2) பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
உதவி இயக்குனர்கள் மதிப்பெண் சான்றிதழ் உறையிடும் பணியினை முடித்து அதனை மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கும் நாள். மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிகளிடம் ஒப்படைக்கு நாள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விநியோக்கும் நாள் தெரிவிக்கப்படுகிறது. உதவி இயக்குனர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை உறையிடும் பணியினை முடித்து அதனை மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கும் நாள் - 6.8.2025மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளி தலைமை ஆசிாியர்களிடம் ஒப்படைக்கும் நாள் - 6.8.2025பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கும் நாள் – 7.8.2025 (ஆகஸ்ட் 7ம் தேதி வியாழன்கிழமை), இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.