தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை (பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள்) மற்றும் இதர படிப்புகளுக்கு கல்வியாண்டு 2022-2023ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
READ ALSO THIS: வேளாண்மை பல்கலை இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்கலாம்
சேர்க்கைக்கான கல்வித்தகுதி மற்றும் கட்டணம் சம்மந்தப்பட்ட விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழக இணையதளத்தில் (
www.tnou.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. கல்வி பயில விரும்பும் மாணவர்களின் நலன்கருதி, வாரத்தின் ஏழு நாட்களிலும் (அரசு விடுமுறை நாள் உள்பட) பல்கலைக்கழக வளாகம் – சென்னை மற்றும் (விழுப்புரம், தருமபுாி, கோவை, மதுரை, சென்னை, ஊட்டி, திருநெல்வேலி , திருச்சி, சேலம், திருவண்ணாமலை, சிவகங்கை, மயிலாடுதுறை) ஆகிய 12 மண்டல மையங்களில் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி , மாணவர் சேர்ந்து பயன் பெறலாம். அதன்படி மாணவர்கள் இன்று முதல் (ஜூலை 1ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம்
சேர்க்கை தொடர்புக்கு
- மாணவர் சோ்க்கை பிரிவு, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
- தொலைபேசி எண்- 044-24306664/15
- இயக்குனர் செல் எண் - 9345913378
- மின்னஞ்சல் முகவரி – tnouadmission@gmail.com
மண்டல மையங்கள்
சென்னை (9345913385),கோயம்புத்தூர் (9345913386), தருமபுரி (9345913387), மதுரை (9345913388/0452-2458966), திருச்சி (9345913391), திருநெல்வேலி (9345913392), ஊட்டி (9655817915), விழுப்புரம் (9345913380), சேலம் (9345913373), திருவண்ணாமலை (9345913374), மயிலாடுதுறை (9345913393) மற்றும், சிவகங்கை (93459 13375).
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.