You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Tamil Nadu NMMS Result Link 2024 | dge.tn.gov.in |என்எம்எம்எஸ் ரிசல்ட் லிங்க் 2024

TN Supplementary Exam Result Link 2024

அரசு தேர்வுகள் இயக்ககம் வௌியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை பெறுவதற்கான (NMMS) தேர்வு கடந்த 3.2.2024 அன்று நடைபெற்றது. இத்தேர்வில் 2,25,490 மாணவர்கள் பங்கு பெற்றனர். 

இத்தேர்வின் முடிவுகள் 28.2.2024 இன்று பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. எனவே, இத்தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் results என்ற தலைப்பில் சென்று தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை பெறுவதற்கான தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2024 என்ற பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து தாங்கள் பெற்ற மதிப்பெண்களை அறிந்துகொள்ளலாம். மேலும் தெரிவு செய்யப்பட்டோரின் பட்டியலும் இந்த இணையதளத்திலேயே National Means cum Merit Scholarship Scheme Examination என்ற பக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது