You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

மருத்துவ கல்வி கட்டணம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழக கல்லூரிகளில் சேர மறுப்பு

neet online exam news in tamil

மாநில ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் மற்ற மாநிலங்களில் சேர்ந்ததால், 1143 இடங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 13.5 லட்சம் ரூபாய், அரசு ஒதுக்கீட்டுக்கு 4.5 லட்சம் ரூபாய், மாநில அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஆனால், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 19 லட்சம் ரூபாய், அரசு ஒதுக்கீட்டுக்கு 11 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

இதனால், சுயநிதி கல்லூாிகளில் சேரும் மாணவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் கேரளா, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இடங்கள் பெற்ற பின், தமிழக கல்லூரிகளை கைவிடுகின்றனர். 

அதேபோல், அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களும், எய்ம்எஸ் மற்றும் மத்திய பல்கலையில் இடம்பெற்று சென்றுள்ளனர். அதன்படி அரசு மருத்துவ கல்லூரிகளில் 59 எம்பிபிஎஸ், 63 பிடிஎஸ் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 503 எம்பிபிஎஸ், 519 பிடிஎஸ் என மொத்தம் 1143 இடங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.  

இதுகுறித்து, மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி கழக இயக்குனர் சங்குமணி கூறுகையில், அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்றதால், தமிழக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றவர்கள், அதை வேண்டாம் என்று திரும்ப ஒப்படைத்து உள்ளனர். இந்த இடங்கள், அடுத்த கட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்படும், என்றார்.