தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை போர் கால அடிப்படையில் எதிர்கொள்ளும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளிக்குமாறு, கேட்டுக்கொண்டார்.
இதற்கு பல்வேறு தரப்பினா், ஏழைய எளிய மக்கள் முதல், தொழிலதிபர்கள் வரை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி செலுத்தி வருகின்றனர். ஜேக்டோ – ஜியோ அமைப்பினர் உள்பட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர், தங்களது ஒரு நாள் சம்பளத்தை கொரோனா நிதிக்காக பிடித்தம் செய்யுமாறு, கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த சமயத்தில், சேலம் மாவட்டத்தில் கல்வி அதிகாரிகள் கொரோனா கட்டாய வசூலில் களமிறங்கியுள்ளதாக ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பாக பேசு பொருளாகியுள்ளது, மேலும் சில ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பெயர் கூற விரும்பாத ஆசிரியர்கள் கூறுகையில், ஏற்கனவே, நாங்கள் தமிழக அரசுக்கு ஒரு நாள் ஊதியத்தை நிதியாக வழங்க ஓப்பு கொண்டோம். ஆனால், இங்கே உள்ள கல்வி அதிகாரிகள் தமிழக அரசிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக ஆசிரியர்களிடம் கொரோனா நிதி வசூல் வேட்டையா, கல்வி அதிகாரிகள் நடவடிக்கையால் அதிருப்தி, ஒவ்வொரு ஆசிரியரிடம் கொரோனா நிதி என்ற பெயரில் கட்டாய வசூலில் இறங்கியுள்ளனர்.
நாங்கள் நிதி அளிக்க தயாராக உள்ளோம். ஆனால், அதிகாரிகள் அதனை வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்காமல், கடிதம் வழியாக அதிகாரி கையெழுத்துடன் உத்தரவு பிறப்பித்தால், நிதி அளிக்கிறோம். எந்த மாவட்டத்தில் இல்லாத நடைமுறை, இங்கே பின்பற்றப்படுவது ஏற்புடையதல்ல, இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் கொரோனா நிதி வசூலிப்பதற்காக, பட்டியல் தயார் செய்யப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பபட்ட நிலையில், அந்த பட்டியல் அனைத்து ஆசிரியர் குழுவில் தீ்யாக பரவி வருகிறது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |