தேனி மாவட்டம் வேதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் உள்ளது அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் பேச்சு, எழுத்து, கட்டுரை போட்டிகள், கலை, இலக்கியம், நாடகம், நகைச்சுவை, பாரம்பரிய உணவு சமையல் என பல மாணவர்களின் தனித்துவ திறமைக்கு ஊக்குவித்து வருகிறது.
இதுதவிர, பள்ளி வளாகத்தில் நம்மாழ்வார் அடர் குறுவனம் உருவாக்கி அதில் ஆயிரக்கணக்கான மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அரிய வகை மரங்களில் ஒன்றான சாணிவீரை எனப்படும் சந்தன மரத்திற்கு நிகரான அகில் வகையை சேர்ந்த மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன. விழுப்புரம் மாவட்டம் ஆரவில் தாவரவியல் பூங்கா சார்பில் அதன் நிர்வாகி ஆதிகேசவன், சுற்றுச்சூழல் கல்வி ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் மரக்கன்றுகளை பள்ளிக்கு அனுப்பி வைத்திருந்தனர். பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். ஏற்பாடுகளை பள்ளி தேசிய பசுமை படை பொறுப்பாசிரியை கலைச்செல்வி செய்திருந்தார். அரிய வகை மரக்கன்றுகளை வழங்கியவர்களுக்கு தலைமை ஆசிரியர் மோகன் நன்றி கூறினார்.