கொரோனவால் சுமார் 300 நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டு, பின்னர் ஜனவரி 19ம் தேதி முதல் திறக்கப்பட்டு, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கி நடந்து வருகிறது. இதேபோன்று 9 மற்றும் 11ம் வகுப்புகள் துவங்க பள்ளி கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 90 சதவீதம் 9, 11ம் வகுப்புகள் தொடங்க அதிக வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை தகவல்கள் தெரிவிக்கிறது.
இருந்தபோதிலும், சில யூடூபர்ஸ் (Yotubers) பள்ளி மாணவர்களை குழப்புவதற்காக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழக முதல்வர் புகைப்படங்களை பயன்படுத்தி, பள்ளிகள் விரைவில் மூடப்படும், மாணவர்களுக்கு நற்செய்தி, கொரோனவால் பள்ளிகள் மூடல் உள்ளிட்ட தலைப்புகளில் காணொளி (VIDEO) தயாரித்து, மாணவர்கள் மத்தியில் பகிர்ந்து, பெரும் குழப்பத்தை விதைத்து வருகின்றனர். பணம் சம்பாதிக்கும் ஒரே நோக்கில், சமூக வலைதளங்களை ஆயுதமாக பயன்படுத்தி, உங்களை காசு பார்க்கும் பொருட்களாக நினைத்து இந்த வேலைகளில் ஒரு சிலர் ஈடுபடுகின்றனர். சமீபத்தில், இதபோன்று காணொளிகள் பள்ளி மாணவர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனையும் பல பேர் அப்படியே நம்புகின்றனர். அவர்கள் கூறுவதை நம்பாமல், உங்களை பள்ளி படிப்பை முடிக்க உங்கள் கவனத்தை படிப்பின் மீது செலுத்துங்கள், ஆசிரியர்கள் சொல்வதை கேளுங்கள், பாடத்தில் சந்தேகமாக இருந்தால் ஆசிரியர்களிடம் கேளுங்கள். இதேபோன்ற Youtube வீடியோக்கள் உங்கள் எண்ணத்தை மாற்றி, கல்வியை சிதறடித்து விடும், எப்போது பள்ளி விடுமுறை அளிக்கப்படும் என்ற எண்ண ஓட்டத்திலும் உங்களை தள்ளிவிடும். இவற்றிற்கு இடம் அளிக்காதீர்கள். எந்த செய்தியாக இருந்தாலும், தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும், அதுவரை எந்த ஒரு தகவலும் நம்ப வேண்டாம். அதே சமயத்தில், கொரோனா காலத்தில் பள்ளி திறப்பு என்பது ஆபத்தான விஷயம் என்பதில் எவ்வித மாற்று கருத்தே இல்லை. அதே சமயத்தில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும். பொதுத்தேர்வு உறுதிப்படுத்தும் வகையில், அரசு தேர்வுகள் இயக்கம் சார்பில் பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தி உள்ளது. தேர்வுகள் சம்மந்தமாக விரிவான விளக்கத்துடன் அடுத்தடுத்த பதிவில் தகவல்களாக வெளியிடப்படும். நன்றி…