கடந்த வருடம், தர்மபுரி மாவட்டத்தில் தலைமை ஆசிரியை வள்ளியம்மாள் என்பவர் பிளஸ் 2 முடித்துள்ளதாக போலி சான்றிதழ் தயாரித்து, கல்வித்துறையில் சமர்ப்பித்து பணியில் சேர்ந்தார். சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் அவரது சான்றிதழ் ஆய்வு செய்த போது, அவா் போலி சான்றிதழ் கொடுத்தது தெரியவந்தது. மேலும், கல்வித்துறைக்கு டிமிக்கி கொடுத்து கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உத்தரவின் பேரில், அவர் மீது சட்ட நடவடிக்கை பாய்ந்தது.
இதே சம்பவம் போன்று, மற்றொரு சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் அரங்கேறியது, கல்வித்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று, மகாலிங்கம் என்பவர், குட்டூர் என்ற அரசு தொடக்க நிலைப்பள்ளியில் கடந்த 1990ம் ஆண்டு ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். தற்போது அவர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை பணியாற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் கல்வி அதிகாரிகள் அவரது கல்வி மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் குறித்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதனை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது, அவரது 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போலியாக சமர்ப்பி்த்தது தொியவந்தது. மேலும், அவா் 12ம் வகுப்பில் 582 மதிப்பெண் எடுத்த நிலையில், அவர் 972 என மதிப்பெண்ணை மாற்றிக்கொண்டனர். தற்போது அவர் வசமாக சிக்கிய நிலையில், கல்வி அதிகாரிகள் அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரும் அவர் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.