தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சி அரசு திங்கட்கிழமை (மார்ச் 29ம் தேதி) கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அவர்களை நேரில் சந்தித்து ஐந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தேர்தல் முதல் நாள் மற்றும் தேர்தல் நாள் காலை மதியம் மற்றும் அன்று இரவு வரை உணவு ஏற்பாடு செய்து தரப்பட வேண்டும். ஆசிரியர்கள் பெரும்பாலானோர் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய் மற்றும் பிற நோய்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் உரிய நேரத்தில் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக உணவு கிடைக்க உரிய நடவடிக்கைகள் கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களால் அனைவருக்கும் செய்து தரப்படவேண்டும்.
அதேபோன்று தேர்தல் முடிந்த பிறகு ஆசிரியர்கள் அனைவரும் பாதுகாப்பாக அவரது இல்லம் திரும்ப பொது வாகன வசதி ஏற்பாடு செய்து தரப்பட வேண்டும்.
மேலும் தேர்தலுக்கு அடுத்த நாள் 7.4.2021 அன்று பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்திட வேண்டும்.
சாவடி அமைந்துள்ள பகுதிகளில் தேர்தல் அலுவலர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் 6.4.2021அன்று நடைபெறக்கூடிய தேர்தலில் கொரோனா நோயாளிகள் வாக்களிப்பதற்காக கடைசியாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையத்தால் அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் தேர்தல் அலுவலர்கள் அனைவரும் பாதுகாப்பு உடையுடன் அந்த கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க உரிய உதவிகள் பாதுகாப்புடன் செய்ய வேண்டிய சூழ்நிலையில் பெரும் பதட்டத்துடன் அதை எதிர்நோக்கி உள்ளோம்.
ஆகையால் தாங்கள் தயவு செய்து எப்படி முதியவர்களுக்கு தபால் வாக்கு அளித்து அதை திரும்பப் பெற்று வருகிறீர்களோ அதேபோல கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் தபால் வாக்கு அளிக்கப்பட்டு அதை தனியாக சுகாதார ஆய்வாளர் மற்றும் தேர்தல் அலுவலர் மூலம் திரும்பப் பெற்று கொண்டு, எங்களை எல்லாம் இந்த பயத்திலிருந்து விடுவிக்க வேண்டும்.
மேலும் அனைவரும் கொரோனா தடுப்பூசி உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் முக கவசம் கட்டாயம் அனியவேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா நோய் தடுப்பு வழிமுறைகள் பின்பற்ற வேண்டும்.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட செயலாளர் உடன் மாவட்ட துணைச் செயலாளர் திரு ஆபிரகாம் மேஷாக் மற்றும் பேரூர் வட்டார செயலாளர் திரு கே செந்தில் குமார் அவர்கள் கலந்துகொண்டனர் இந் நிகழ்வில் சுமார் அரை மணிநேரம் கருத்துக்களைச் சொல்ல வாய்ப்பளித்த கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.
இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.