அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

நடுவுல கொஞ்சம் கையெழுத்த காணோம், கல்வி அலுவலர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் – Unsigned Orders

ஒரு கையெழுத்து, தலையெழுத்தை மாற்றும் என்ற வேடிக்கை பேச்சு உண்டு. இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ, நிச்சயம் அரசு வேலையில் உள்ளவர்களுக்கு பொருந்தும். ஒரு கையெழுத்தினால், பதவி உயர்வு பெறுபவர்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியும், அதே கையெழுத்தினால், துறை நடவடிக்கை ஆளாபவர்களுக்கு எவ்வளவு வேதனை உணர்ந்தவர்களுக்கு தெரியும். ஒரு அரசு அலுவலாின் கையெழுத்து இங்கு எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது அனைவரும் அறிய முடியும்.

சமீபகாலமாக, பள்ளி கல்வித்துறையில் இருந்து வெளியாகும் கல்வி அலுவலர்களின் செயல்முறை உத்தரவுகளை உன்னிப்பாக கவனிக்கும் போது, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் தமிழ் பட டைட்டில் போல், உத்தரவு இறுதியில் அலுவலர்களின் கையெழுத்து காணோம், என்பது தெளிவாக அறிய முடிகிறது. குறிப்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து, இதுபோன்ற கையொப்பம் இல்லாத உத்தரவுகள் தொடர்ச்சி வெளிவந்த வண்ணம் உள்ளது, எப்படி இதனை ஏற்றுகொள்ள முடியும், இது சரியான அலுவலக நடைமுறையா எண்ணற்ற பல கேள்விகளுக்கு ஒரு சிறய விளக்கம் கொடுக்கப்பட்டது. இது உங்களுக்கு விழிப்புணர்வு பதிவாக கூட இருக்கலாம்.

சரி கையெழுத்து குறித்து அலுவலக நடைமுறை என்ன சொல்கிறது? – Unsigned orders:    

தலைமை செயலக அலுவலக நடைமுறை நூல் (secretariat office manual) மற்றும் மாவட்ட அலுவலக நடைமுறை நாள் (district office manual), பக்கம் எண் 33 (secretariat office manual) என்ன கூறுகிறது என்றால்,  

தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் தலைமைச் செயலக அதிகாரிகள் / அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதி, தமிழ்நாடு குடிமை பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீட்டு) விதியின் கீழ் பணிபுரியும் அதிகாரிகள்/ அலுவலர்கள் அலுவலக உத்தரவுகளை (Office Orders) எவ்வாறு நடை முறைப்படுத்த வேண்டும், எவ்வகையான அரசு அலுவலக நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் தெளிவாக கூறியுள்ளது.

அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊக்க ஊதியம், விடுப்புகள், தகுதிகாண் பருவம், சிறு தண்டணைகள் ஆகிய அலுவலக செயல்முறைகளாகவும் மற்றும் இறுதி ஆணை போன்றவை வழங்கப்படும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலரின், அதிகாரியின் கையொப்பம் இருக்க வேண்டும் என்பது தெளிவாக கூறியுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்துறை அரசாணை நிலை எண் 199 நாள் 3.6.2004 உத்தரவுகளில் அரசு அதிகாரிகள் / அலுவலர்கள் முறையே அலுவலகத்தில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகளுக்கு கண்டிப்பாக சம்மந்தப்பட்ட அலுவலரின் கையொப்பமிடப்பட்டிருக்க (Fair Copy) வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு அலுவலகத்தில் இருந்து பிறக்கப்படும் எந்த உத்தரவிற்கும் அரசு அலுவலர், அலுவலக தலைவர் அவரது கையொப்பம் இல்லாத உத்தரவினை எப்படி அலுவலக உத்தரவு கருத இயலும் என்பதை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

அரசு அலுவலரின் கையொப்பம் இல்லாத உத்தரவினை அவருக்கு வேண்டாதவர், எதிராளிகள் கூட அவர்களது பெயருக்கு வேண்டுமென்றே களங்கம் விளைவிப்பதற்காக கூட இவ்வாறான கையொப்பம் இல்லாத உத்தரவுகளை பள்ளிகளுக்கு அனுப்ப முடியும், இதுபோன்ற உத்தரவுகளை எப்படி அரசு உத்தரவாக ஏற்றுகொள்ள முடியும் என்பதே அனைவரின் முக்கிய கேள்வியாக உள்ளது.

எங்கிருந்து வருகிறது கையெழுத்து இல்லா உத்தரவுகள் – Unsigned Orders:

பள்ளி கல்வி முதன்மை செயலாளரிடம் மறு்றும் இயக்குனரகத்திலும், இருந்து வரும் உத்தரவுகளில்கூட, அவர்களின் கையெழுத்து உள்ளது. ஒரு வேளை, அதிகாரிகள் கையெழுத்து இல்லாத பட்டசத்தில் பிரிவு அலுவலரின் (Section Officers) கையெழுத்தாவது சில உத்தரவுகளில் காண முடிகிறது. ஆனால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் உத்தரவுகளில் பிரிவு அலுவலர் கண்காணிப்பாளர் கையெழுத்த கூட இருப்பதில்லை.

Unsigned official orders is equal to unsigned petition

சமீபத்தில் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து வெளியானது போல், ஒரு உத்தரவு நகல் வாட்ஸப் குழுவில் பகிரப்பட்டு வந்தது. அதில், சம்மந்தப்பட்ட அலுவலர் கையொப்பம் இல்லை. இது ஒரு பக்கம் என்றால், அந்த உத்தரவு நகலில், வார்தைகள் நடுவில் ஆங்காங்கே கட்டம் கட்டிய குறியீடாக பல இடங்களில் காண முடிந்தது. அந்த உத்தரவில், ஆசிரியர்கள் கொரோன தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்து.

இதுபோன்ற உத்தரவுகள் எப்படி ஏற்று கொள்ள முடியும், இது சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்துதான் பள்ளிக்கு வருகிறதா?, கையெழுத்து போட என்ன தயக்கம், பள்ளிக்கு அனுப்பும் உத்தரவில் இப்படிதான் கட்டம் கட்டிய குறியீடுகளுடன் அனுப்புவாா்களா, அலுவலக நடைமுறைகள் பின்பற்ற என்ன தயக்கம் என பல கேள்விகள் ஆசிரியர்கள் மத்தியில் உதிர்கிறது.

இதேபோல் தொடர்ச்சியாக பல உத்தரவுகள் கிருஷ்ணகிாி, சேலம் உள்ளிட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அலுவலரின் கையெழுத்து இல்லாமல் உத்தரவுகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

சில ஆசிரியர்கள் கூறும்போது, பிரச்னைகள் இல்லாதவைக்கு, அலுவலர்கள் கையெழுத்து தாங்கிய உத்தரவுகள் பள்ளிகளுக்கு வருகிறது. குறிப்பாக, பிரச்னை அல்லது சந்தேகம் என்றால், அந்த உத்தரவுகளில் அலுவலர்கள் கையொப்பம் இருப்பதில்லை. இது காலகாலமாக நடந்து வருகிறது. உதாரணமாக, சமீபத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த உத்தரவுகளில் அலுவலர் கையொப்பம் இல்லை. ஏதாவது பிரச்னை வந்தால், இதுபோன்ற உத்தரவுகளை நாங்கள் அனுப்பவே இல்லை என்று அவரால் கூற முடியும் என்பதற்காகவே இவ்வாறு அவர்கள் செய்கிறார்கள் என்ற சந்தேகம் உள்ளது.

தலைமை செயலக நடைமுறை உத்தரவை பின்பற்றி, அலுவலர்கள் தாங்கள் அனுப்பும் உத்தரவுகளில் கையெழுத்து போட வேண்டும் என்று பள்ளி கல்வி உயரதிகாரிகள் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கிட வேண்டும். அப்போதுதான், ஆசிரியர்கள் அந்த உத்தரவினை சந்தேகமின்றி உறுதியாக நம்ப முடியும், இவ்வாறு அவர்கள் தங்களது ஆதங்கத்தினை கொட்டி தீர்த்தனா்.

Related Articles

Latest Posts