You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

கல்வி அலுவலகத்தில் புத்தக பண்டல்களை திருடிய திருடர்கள் (Pattukottai DEO office)

|

சமீபகாலமாக அரசு பள்ளிகள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் கொள்ளையர்கள் கணினி, புரஜெக்டர், புத்தக பண்டல்கள் உள்ளிட்டவை திருடுவது வாடிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட வழக்குப்பதிவுகள் காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முக்கிய காரணம், கோடிகணக்கில் நிதி ஒதுக்கும் தமிழக அரசு கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் இரவு காவலர்கள் நியமிக்க தயக்கமா தயங்கி வருகிறது. இதன் விளைவு, திருடர்களுக்கு சாதகமாகவிடுகிறது. அதுமட்டுமா, குடிமகன்கள் அரசு பள்ளியை இரவு நேரத்தை குத்தகை எடுத்துகொள்கின்றனர். செய்யாத சேட்டையாக பள்ளி வளாகத்தையும், பள்ளி சுவரையும் நாசம் செய்கின்றனர். ஏனென்றால், அரசுடைய சொத்து யாரு கேள்வி கேட்பது என்று அசட்டு தைரியம்தான், ஆனால் அவர்கள் இருக்கிற வீடு, இடம் எல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமாம். என்ன ஒரு நயவஞ்சக சுயநலம்தனம். 

இந்த வரிசையில், பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலகத்தில் (Pattukottai DEO Office) கொள்ளையர்கள் 500 புத்தக பண்டல்கள்களை திருடிச் சென்றுள்ளனர். க்ளைமாக்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள அறைகளில் பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அனுப்பிவரும் புத்தக பண்டல்கள் வைக்கப்படுவது வழக்கம். அதேபோல், தற்போது 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க கூடிய 500 புத்தக பண்டல்கள் உள்ளே வைத்து பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

சம்பவத்தன்று யாரோ மர்ம நபர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள புத்தக அறையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கு இருந்த 500 புத்தக பண்டல்களை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து பட்டுக்ேகாட்டை மாவட்ட கல்வி அலுவலர் ஜான்பாக்கியசெல்வம் பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை பிடித்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.