ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளகளில் 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி சேவை வழங்கும் பொருட்டு இணையதள வசதி ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் 218 பள்ளிகளுக்கு ஓரு பள்ளிக்கு ரூ.35,000 வீதம், 218 பள்ளிகளுக்கு ரூ.77,39,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வழிகாட்டுதல், இதில் வை-பை ரூட்டர் மற்றும் லீசுடு லைன் கனெக்ஷன் (5எம்பிபிஎஸ்) இணைய சேவை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி செலவினம் மேற்கொள்ள வேண்டும், எமிஸ் போர்ட்டலில் பதிவிட வேண்டும். ஆசிரியர் பயிற்றுநர்கள் பொறுப்பு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட இணையதள வசதி அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அவ்வப்போது, திட்ட அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும்