தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை 2021-22 கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற வழக்கில் தனியார் சுயநிதிப்பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்கனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை உட்பட்டு, மாணவர் சேர்க்கை விருப்பம் தெரிவிக்கும் நிலையில், விருப்பத்திற்கேற்ப பாடப்பிரிவினை ஒதுக்கலாம். அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, கூடுதல் விண்ணப்பம் பெறப்பட்டால், 10 முதல் 10 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம். அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்த பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ, அந்த சூழ்நிலையி்ல, அதற்கென விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப்பிரிவோடு தொடர்புடைய கீழ் நிலை வகுப்பு பாடங்களில் இருந்து 50 வினாக்கள் ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கி, அவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பிரிவுகளை ஒதுக்கலாம்.