பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடக்கும் தேதியை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் வெளியிட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது, அதன்படி மே 3ம் தேதி மொழிப்பாடம் தொடங்குகிறது. மே 5ம் தேதி ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வு நடக்கிறது. மே 7ம் தேதி கணினி அறிவியல், உயிரி வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல் தேர்வு நடக்கிறது. மே 11ம் தேதி இயற்பியல், பொருளியல் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. மே 17ம் தேதி கணிதம், வணிகவியல், விலங்கியல், உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. மே 19ம் தேதி உரியியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. மே 21ம் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் உள்ளிட்ட தேர்வுகள் நடக்கிறது. செய்முறை தேர்வுகள் குறித்து பள்ளி கல்வித்துறை எந்த தகவலும் வெளியிடவில்லை.