பள்ளிகளில் 9, 10 மற்றும் 11ம் வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஆன்லைனில் வகுப்புகள் நடத்த வேண்டும் என தமிழக அரசு கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. வாரத்தில் ஆறு நாட்கள் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இவ்வாறு பல உத்தரவுகளை தமிழக அரசு செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளர். இந்த உத்தரவு தற்போது முதல் அமலாகிறது
மேலும் படிக்க கீழே உள்ள ஆணையை காணலாம்.
தகவல் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு பகிரவும்