You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

செமஸ்டர் தேர்வுகள், கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவுரை

செமஸ்டர் தேர்வுகள், கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவுரை

சென்னையில் அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு சில அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பா் / டிசம்பர் 2020 ஆண்டுக்கான பருவத் தேர்வுகள் ஒழுங்கு நிகழ்நிலை தேர்வாக (online exam) 2021 பிப்ரவரி மாதம் நடந்தது எனவும், இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்கு வந்ததாகவும், செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் சந்தித்த சிரமங்களை கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தை கருதி நன்கு படிக்கும் சில மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண் குறைந்ததாகவும், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி,

பிப்ரவரி 2021ல் நடந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வு நடத்தப்படும்.

இந்த மாணவர்கள் இத்தேர்வுக்கு தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

பிப்ரவரி மாதம் நடந்த தேர்வில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்கள் விரும்பினால் அவர்களும் இத்தேர்வினை எழுதலாம்.

தேர்வு 3 மணி நேரம் நிகழ்நிலை தேர்வாக (online exam) நடைபெறும். பல்கலைக்கழகம் கொரோனாவிற்கு முன்பு பின்பற்றிய பழைய வினாத்தாட்கள் முறையே கடைபிடிக்கப்படும். இத்தேர்வுகள் தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்கள் நடத்தியது போல் நடத்தப்படும்.

எதிர்வரும் ஏப்ரல் /  மே 2021 பருவநிலை தேர்வுகளும் மேற்கண்ட முறையிலேயே நடத்தப்படும்.

பிற பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள்

தற்போது ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள படிப்புகளுக்கான தேர்வுகள் மே 25ம் தேதி முதல் தொடர்ந்து நடத்தப்படும். அதற்கான அறிவிப்புகளை அந்தந்த பல்கலைக்கழகங்களே வெளியிடும். மாணவர்கள் ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.