புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வழக்குப்பதிவு, கைது, ஒழுங்கு நடவடிக்கை எதிர்கொண்ட நிலையில், தமிழக அரசு உத்தரவை தொடர்ந்து, பேராசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்து அதற்கான உத்தரவை கல்லூரி கல்வி இயக்குனர் பூரண சந்திரன் இன்று வெளியிட்டார்.
அந்த உத்தரவில், 2019ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீது தொடரப்பட்டு நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக கைவிடப்படுகிறது.
2019ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில் தண்டனை வழங்கி இறுதி ஆணைகள் வெளியிடப்பட்ட நிகழ்வுகள் எவையேனும் இருப்பின் அவை அனைத்து ரத்து செய்யப்படுகின்றன.
2019ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீது தொடரப்பட்டு நிலுவையில் உள்ள குற்றவியல் நடவடிக்கைகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட அரசாணையில் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படுகிறதென்று தெரிவித்துள்ள நிலையில், இணைப்பில் உள்ள உதவி, இணை பேராசிரியர்களின் தற்காலிக பணி நீக்க காலங்களை முறைப்படுத்துமாறு அறிவிக்கலாகிறது.