You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

பகுதி நேரம் படிப்பு குறித்து கவலை வேண்டாம் - பல்கலைக்கழகம் விளக்கம்

|||

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் (பொ) சீனிவாசன், 8.1.2021 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழக மானியக்குழு 1956ம் ஆண்டு சட்டப்பிரிவு 22ன் கீழ் பட்டங்களை வரையறை செய்துள்ளது. மத்திய அரசு சட்டம் அல்லது மாநில அரசு சட்டம் அல்லது 1956ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழுவின் பிரிவி 3-ன் படி பல்கலைக்கழகமாக அங்கிகரீக்கப்பட்ட நிறுவனம் போன்றவற்றால் மட்டுமே அவ்வாறான பட்டங்களை வழங்க முடியும்.

அழகப்பா பல்கலைக்கழகம், தமிழக அரசின் State Legislature –ன் படி 1985-ல் உருவாக்கப்பட்ட அரசு பல்கலைக்கழகம் ஆகும். அழகப்பா பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியக்குழுவின் சட்டப்பிரிவு 2(f) மற்றும் 12(b)-ன் அங்கீகாரம் பெற்றுள்ளது. எனவே அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் பெறும் பட்டம் மத்திய, மாநில அரசின் அங்கீகாரம் பெற்றதாக கருதப்படும்.

மேலும் அழகப்பா பல்கலைக்கழகம், தேசிய தர நிர்ணய ஆணையமிடமிருந்து, முதல் சுற்றில் (2005-இல்) 301 தரப்புள்ளியுடன் ‘A’ Grade-ம், இரண்டாவது சுற்றில் (2011-இல்) 321 தரப்புள்ளிகளுடன் ‘A’ Grade-ஐ தக்க வைத்ததுடன், மூன்றாவது சுற்றில் (2017-இல்) 364 என்ற உயர்ந்த தரப்புள்ளி பெற்றதால் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவும் இணைந்து அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு தரவரிசை – 1 மற்றும் தன்னாட்சி அந்தஸ்து வழங்கியுள்ளது.

இதனால் பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதியின்றி புதிய பாடதிட்டங்கள், புதிய துறைகள், பள்ளிகள், மற்றும் ைமயங்கள் ஆகியவற்றை ஏற்கனவே நடத்திக்கொண்டிருக்கின்ற கல்வி கட்டமைப்புடன் ஆரம்பித்து நடத்தலாம்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நிறைஞர் (கோடை கால தொடர்திட்டம்) படிப்பு பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு மற்றும் நிலைக்குழுவால் அங்்கிகரீக்கப்பட்டு 2016, 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகள் நடத்தப்பெற்றன. 2016ல் NAAC-இன் ‘A’ Gradeம் 2017ல் ‘A+’ Grade-ம் பெற்றதால் மத்திய மனிதவள மேம்பாட்டு மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவின் பிரிவு தரத்திற்கு உயர்த்தப்பட்டதால், பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதியின்றி பாடங்கள், துறைகள் உள்ளிட்வை ஆரம்பித்து நடத்த தன்னாட்சி அதிகாரம் பெற்றதால் அப்பட்டங்கள் பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதி பெற்றதாகவே கருதலாம்.

மேலும் அழகப்பா பல்கலைக்கழகம் நடத்த ஆய்வில் நிறைஞர் (கோடை கால தொடர் திட்டம்) படிப்பு, அழகப்பா பல்கலைக்கழகத்தின் முழு நேர படிப்பில் ஆய்வியல் நிறைஞர் படிப்பிற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் (syllabus) தேர்ச்சி பெற குறுமம் வழிகாட்டுதலுக்கான விதிமுறை, போன்றவை முறையாக பின்பற்றப்பட்டுள்ளதால், இப்படிப்பு பகுதி நேர படிப்பிற்கு இணையாக கருதலாம். இவ்வாறு அவர் தனது கடித்தத்தில் கூறியுள்ளார்.