தமிழக உயர் கல்வித்துறையின் செயல்படும் கல்லூரி கல்வி இயக்ககத்தின் இயக்குனர் அனைத்து அரசு கல்லூரி முதல்வர் நேற்று சுற்றறிக்கை ஒன்று அனுப்பினார்.
அதில் அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் (முந்தைய 14 உறுப்பு கல்லூரிகள் உட்பட) பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களில் 30.09.2019 அன்று பிஎச்டி, செட், ஸ்லெட், நெட், சிஎஸ்ஐஆர் கல்வி தகுதிகளுடன் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட பணி அனுபவம் பெற்றவர்கள் மட்டும் சான்றிதழ் சரிபாாப்பிற்காக, ஒதுக்கப்பட்ட நாட்களில் உரிய அனைத்து சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை (அல்லது) முதல்வர் கையொப்பமிட்ட ஆளறிச் சான்றிதழ் (புகைப்படத்துடன்) ஆகியவற்றை நேரில் கொண்டுவருமாறு கௌரவ விரிவுரையாளர்களுக்கு தெரிவிக்குமாறு கல்லூரி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தெரிவித்த விவரத்தினை ஒப்புகை கையொப்பம் பெற்று பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் நாள் மற்றும் விவரம்: சென்னை, வேலூர் மற்றும் தருமபுரி மண்டலத்தில் கீழ் உள்ள கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் வரும் 15 மற்றும் 16ம் தேதியில் சென்ட்ரல் பாலிடெக்னிக் வளாகம், ராஜீவ் காந்தி சாலை, தரமணி (மத்திய கைலாஷ் அருகில்) உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும். கோவை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி மண்டலத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் சென்ட்ரல் பாலிடெக்னிக் வளாகம், ராஜீவ் காந்தி சாலை, தரமணி (மத்திய கைலாஷ் அருகில்) உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு பணி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.