தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, நிறுவனத் தலைவர் சா.அருணன், தமிழக தேர்தல் ஆணையர் அவர்களுக்கு அனுப்பிய கடித்தில் கூறியிருப்பதாவது, தொடர்ந்து 12 மணி நேரம் வாக்கு பதிவு நடைபெற இருப்பதால் தேர்தல் பணி செய்யும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 7ம் தேதி விடுமுறை வழங்க வேண்டும் என அவா் வலியுறுத்தி உள்ளார். மேலும் மனுவில் கூறியிருப்பதாவது, வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுவது முன்னிட்டு, மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பிறகு வாக்கு மையங்களுக்கு அரசு ஊழியர்களை பணியமர்த்துவார்கள் அதாவது ஏப்ரல் 5ம் தேதி காலை பயிற்சி வகுப்பிற்கு சென்று அங்கிருந்து பணி ஆணையை பெற்று நேரடியாக வாக்கு மையத்திற்கு அனுப்பப்படுவார்கள், அன்று இரவு தங்கி பணி செய்ய வேண்டும் இந்த தேர்தலில் கொரோனா பரவல் என்பதால் காலை எழு மணி முதல் இரவு ஏழு மணிவரை வாக்கு பதிவு நடைபெற உள்ளது அதாவது தொடர்ந்து 12 மணி நேரம் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. ஒவ்வொரு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களும் 50 கிலோ மீட்டர் தொலை தூரத்தில் பணியமா்த்தப்பட்டு தேர்தல் பணியாற்ற உள்ளனர். இந்த நிலையில், பணி செய்யும் இடம் மற்றும் இருப்பிடத்தை கணக்கில்கொண்டு வேறொரு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுப்படுத்துவதால் அவர்கள் பல சிரமத்திற்கு மத்தியில் தேர்தல் பணியில் செய்ய வேண்டி உள்ளது. வாக்கு பதிவு முடிந்தவுடன் வாக்குபதிவு செய்ய எந்திரத்தை சீல்வைத்து பாதுகாப்போடு எடுத்து செல்ல பல மணி நேரம் ஆகும், குறிப்பாக நள்ளிரவு கூட ஆகும். மறுநாள் காலையில் தான் வீடு திரும்ப முடியும் அதாவது ஏப்ரல் 07ம் தேதி மதியம் தான் செல்ல முடியும். தேர்தல் பணி செய்ய அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்க மதிப்புமிகு தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.